டொயோட்டா கிர்லோஸ்கர் வாகன விற்பனை 16% வளர்ச்சி

டொயோட்டா கிர்லோஸ்கர் வாகன விற்பனை சென்ற ஆண்டின் நவம்பர்-டிசம்பர் மாத காலத்தில் 16 சதவீதம் அதிகரித்தது.
டொயோட்டா கிர்லோஸ்கர் வாகன விற்பனை 16% வளர்ச்சி

டொயோட்டா கிர்லோஸ்கர் வாகன விற்பனை சென்ற ஆண்டின் நவம்பர்-டிசம்பர் மாத காலத்தில் 16 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநரும், துணைத் தலைவருமான (சந்தைப்படுத்துதல் & விற்பனை) என். ராஜா கூறியதாவது:
சென்ற 2016-ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத காலத்தில் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் வாகன விற்பனை முறையே 11,309 மற்றும் 12,747-ஆக இருந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டின் இதே கால அளவில் விற்பனை முறையே 10,278 மற்றும் 10,446-ஆக காணப்பட்டது.
இதையடுத்து, நவம்பர்-டிசம்பர் கால அளவில் வாகன விற்பனை 16 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டது.
வழக்கமாக டிசம்பர் மாதத்தில் வாகன விற்பனை சிறப்பான அளவிலேயே இருக்கும். ஆண்டு கடைசியில் உள்ள கையிருப்பை குறைக்கும் வகையில் கார் விற்பனைக்கு அதிக தள்ளுபடி சலுகைகள் அளிக்கப்பட்டன.
இருந்தபோதிலும், கரன்ஸி விவகாரத்தால் விற்பனை மந்தமாகவே இருந்தது. இதன் பாதிப்பு, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டிலும் எதிரொலிக்கும்.
டிசம்பரில் இன்னோவா கிரிஸ்டா கார் விற்பனை 65 சதவீதமும், பார்சூனர் மாடல் கார் விற்பனை 174 சதவீதமும் அதிகரித்தன. கடந்த 2009-ஆம் ஆண்டில் பார்சூனர் கார் அறிமுகமானது.
இதையடுத்து, சென்ற டிசம்பரில் அதன் விற்பனை 1 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
மேற்கண்ட இரண்டு மாடல் கார்களுக்கும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. அதிலும், டீசல் வகை கார்களையே இப்பகுதி வாடிக்கையாளர்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். மொத்த விற்பனையில் இன்னோவாவின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com