ஆண்டுக்கொரு புதிய தயாரிப்பு ரெனோ திட்டம்

ஒவ்வோர் ஆண்டும் நவீன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆண்டுக்கொரு புதிய தயாரிப்பு ரெனோ திட்டம்

ஒவ்வோர் ஆண்டும் நவீன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரெனோ இந்தியா தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சுமித் சாஹ்னி தெரிவித்ததாவது:
இந்திய சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு புதிய காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். வரும், 2021-ஆம் ஆண்டு வரை இந்த செயல் திட்டத்தை விடாது நடைமுறைப்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அதிநவீன தொழில்நுட்பத்திலான புதிய கார் விரைவில் அறிமுகமாகும்.
தற்போது, இந்தியாவில் டஸ்டர் மற்றும் கிவிட் உள்ளிட்ட ஐந்து மாடல்களில் கார் விற்பனையை மேற்கொண்டுள்ளோம்.
ரெனோ நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சிக்கு இந்திய சந்தை மிக முக்கியமானதாகும். அதனை உணர்ந்து விநியோக மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.
இந்தியாவில் ஐரோப்பிய பிராண்டுகள் கார் விற்பனையில் ரெனோ முதலிடத்தில் உள்ளது. எனவே, அதனை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து ஒழிப்பது மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்ற முக்கிய கொள்கை முடிவுகள் இந்தியாவின் மோட்டார் வாகன துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்றார் அவர்.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாத கால அளவில் ரெனோ நிறுவனம் 91,702 கார்களை விற்பனை செய்தது. கடந்த நிதி ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 185.22 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com