பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.10,103 கோடி முதலீடு

பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் சென்ற டிசம்பரில் முதலீட்டாளர்கள் ரூ.10,103 கோடியை முதலீடு செய்துள்ளனர். கடந்த 18 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச முதலீடாகும் இது.

பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் சென்ற டிசம்பரில் முதலீட்டாளர்கள் ரூ.10,103 கோடியை முதலீடு செய்துள்ளனர். கடந்த 18 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச முதலீடாகும் இது.
பங்குகள் மற்றும் கடன்பத்திர சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு லாபகரமான வருவாய் கிடைப்பதையடுத்து, முதலீட்டாளர்களின் கவனம் அவற்றின் பக்கம் திரும்பியுள்ளது.
பங்குகளில் பெரிய தொகையை ஒரே முறை முதலீடு செய்வதற்கு பதிலாக, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.பி. (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான்) திட்டங்கள் முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது. வாரம், மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டங்கள் மூலம் பங்குகளில் தேவையான அளவுக்கு முதலீடு செய்யலாம்.
பங்கு சார்ந்த மொத்த முதலீடுகளில் எஸ்.ஐ.பி.யின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அதனை எடுத்துக் காட்டும் வகையில், டிசம்பரில் ரூ.3,900 கோடி அளவுக்கு இத்திட்டங்கள் மூலம் முதலீடு மேற்கொள்ளப்
பட்டது.
பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்களை (இ.எல்.எஸ்.எஸ்.) உள்ளடக்கிய பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் சென்ற டிசம்பரில் முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.10,103 கோடி முதலீடு செய்தனர்.
கடந்த 2015 ஜூன் மாதத்தில் பங்கு சார்ந்த திட்டங்களில் அதிக அளவாக ரூ.12,273 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த முதலீடு 2016 நவம்பரில் 9,079 கோடியாக காணப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் பங்கு சார்ந்த திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.51,000 கோடியை நெருங்கியுள்ளது. இதன் பலனாக, சென்ற ஏப்ரல் மாத இறுதியில் ரூ.4 லட்சம் கோடியாக பங்கு சார்ந்த பரஸ்பர முதலீடு டிசம்பர் இறுதி நிலவரப்படி ரூ.4.70 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com