பங்குச் சந்தையில் விறுவிறுப்பு

இரண்டு வர்த்தக தினங்களாக சரிவைக் கண்ட இந்தியப் பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பைக் கண்டன.

இரண்டு வர்த்தக தினங்களாக சரிவைக் கண்ட இந்தியப் பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பைக் கண்டன.
பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும் நாட்டின் வரி வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இருக்கும் என்ற நிலைப்பாட்டால், முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு செய்தனர்.
தொழில்துறை பங்குகளின் விலை அதிகபட்சமாக 1.56 சதவீதம் அதிகரித்தது.
அதேசமயம், ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
அதானி போர்ட்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 3.25 சதவீதம் அதிகரித்தது. ஆக்சிஸ் வங்கி பங்கின் விலை 1.17 சதவீதம் சரிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 173 புள்ளிகள் அதிகரித்து 26,889 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 8,288 புள்ளிகளாக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com