205 போயிங் விமானங்களை வாங்க ஸ்பைஸ் ஜெட் ஒப்பந்தம்

விமான சேவையில் ஈடுபட்டு வரும் ஸ்பைஜ் ஜெட் நிறுவனம், 205 விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
205 போயிங் விமானங்களை வாங்க ஸ்பைஸ் ஜெட் ஒப்பந்தம்

விமான சேவையில் ஈடுபட்டு வரும் ஸ்பைஜ் ஜெட் நிறுவனம், 205 விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
விமான சேவையை பரவலாக்கும் வகையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், 205 புதிய விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1.50 லட்சம் கோடியாகும் (2,200 கோடி டாலர்).
ஸ்பைஸ் ஜெட் மட்டுமின்றி இந்திய விமானப் போக்குவரத்து துறை வரலாற்றிலும் இது மிகப்பெரிய ஒப்பந்தமாகும்.
விமானங்கள் வாங்கும் நடவடிக்கைகளுக்காக பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. நிறுவனத்தின் நிதி நிலைமை நல்ல நிலையில் உள்ளது.
தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 32 பி737எஸ் விமானங்களும், 17 பாம்ரைடர் கியூ400எஸ் விமானங்களும் உள்ளன என்றார் அவர்.
போயிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரே கானர் இந்த ஒப்பந்தம் குறித்துக் கூறுகையில், " ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு 205 விமானங்களை வழங்க ஒப்புக் கொண்டதன் மூலம் எங்கள் கூட்டணி பத்து ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்து நிற்கும் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது' என்றார் அவர்.
நடப்பு நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முன் எப்போதும் கண்டிராத வகையில் ரூ.59 கோடி லாபத்தை ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் லாபம் ரூ.29 கோடியாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com