இந்தியாவில் ரூ.55 கோடி முதலீட்டில் வடிவமைப்புக் கூடம்: குவால்கோம் திட்டம்

இந்தியாவில் ரூ. 55 கோடி முதலீட்டில் செல்லிடப்பேசி "சிப்'களை வடிவமைக்கும் கூடத்தை அமைக்க உள்ளதாக குவால்கோம் நிறுவனம் தெரிவித்தது.

இந்தியாவில் ரூ. 55 கோடி முதலீட்டில் செல்லிடப்பேசி "சிப்'களை வடிவமைக்கும் கூடத்தை அமைக்க உள்ளதாக குவால்கோம் நிறுவனம் தெரிவித்தது.
இது தொடர்பாக புது தில்லியில் குவால்கோம் நிறுவனத்தின் ஆசியா-பசிபிக் பிரிவின் துணைத் தலைவர் ஜிம் கேத்தி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் எங்கள் நிறுவனத்துக்கு செல்லிடப்பேசிகளுக்கான அதிநவீன ஆய்வுக் கூடங்கள் உள்ளன. அவற்றை அதிநவீன வடிவமைப்புக் கூடமாக விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக 85 லட்சம் டாலர் (சுமார் ரூ. 55 கோடி) முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்லிடப்பேசி செயலிகள் (அப்ளிகேஷன்ஸ்) துறையைப் பொருத்த வரையில், இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் உள்ளனர். நாட்டின் மென்பொருள் உருவாக்கும் திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய ஆய்வுக் கூடத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர். செல்லிடப்பேசிகளுக்கான "சிப்'களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த குவால்கோம் நிறுவனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com