லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர லாபம் 70% அதிகரிப்பு

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 70.1 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 78.38 கோடியாக உள்ளது என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர லாபம் 70% அதிகரிப்பு

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 70.1 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 78.38 கோடியாக உள்ளது என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கையை வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பார்த்தசாரதி முகர்ஜி சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது: காலாண்டில் வருவாய் ரூ. 879.26 கோடியாக இருந்தது. நிகர லாபம் 70.1 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 78.38 கோடியாக உள்ளது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத கால அளவில் வங்கியின் மொத்த வருமானம் 17.52 சதவீதம் அதிகரித்து, ரூ.2,484 கோடியைப் பெற்றுள்ளோம். அந்த 9 மாத கால அளவில், டெபாசிட் ரூ.23,937.67 கோடியிலிருந்து ரூ.27,750.59 கோடியாக அதிகரித்துள்ளது. இது 15.93 சதவீத வளர்ச்சியாகும். அக்கால அளவில் வங்கியின் செயல்பாட்டு லாபம் 48.46 சதவீதம் அதிகரித்து ரூ.455.70 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் 55 சதவீதம் அதிகரித்து ரூ. 203.91 கோடியாக உள்ளது. மூன்று காலாண்டுகளில் வங்கியின் மொத்த வருமானம் 17.52 சதவீதம் அதிகரித்து, ரூ.2,484.43 கோடியாக உள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 2.78 சதவீதமாக உள்ளது. நிகர அளவில் வாராக் கடன் விகிதம் 1.82 சதவீதமாக உள்ளது.
லக்ஷ்மி விலாஸ் வங்கி தற்போது 16 மாநிலங்களில் இயங்கி வருகிறது. மொத்தம் 467 கிளைகள் செயல்பட்டு வருகின்றன; 927 ஏடிஎம் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 75 சதவீத ஏடிஎம் மையங்களில் போதுமான அளவு பணம் நிரப்பப்படுகிறது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏடிஎம் மையங்கள் வழக்கொழிந்து போகும் என்று கூற முடியாது. மேற்கத்திய நாடுகளில் நமது நாட்டில் இருப்பதைக் காட்டிலும் ஏடிஎம் மையங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அங்கு டிஜிட்டல் பரிவர்த்தனையோடு, ஏடிஎம் மையங்களும் செயல்படுகின்றன. அதே போன்று இந்தியாவிலும் ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்.
வங்கி, ஏடிஎம் மையங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்து வருகிறது. ஆனால் புதிய ரூ.500 நோட்டுகள்தான் குறைவாக உள்ளன. இருப்பினும் ரிசர்வ் வங்கியில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்று வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருகிறோம் என்றார் அவர்.
வங்கியின் செயல் இயக்குநர் என்.எஸ்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com