பங்குச் சந்தையில் 274 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 274 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது.
பங்குச் சந்தையில் 274 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 274 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது.
நிறுவனங்களின் காலாண்டு செயல்பாடுகள் முதலீட்டாளர்களுக்கு அதிருப்தி தருவதைக் காட்டும் விதமாக, பங்குச் சந்தையானது, சரிவை சந்தித்தது.
நாள் முழுவதும் பங்கு வர்த்தகம் நஷ்டத்திலேயே நடைபெற்றது. வங்கித் துறை பங்குகள் அதிக அளவு இழப்பை சந்தித்தன. ஆக்சிஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் கடும் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அதிக அளவில் அந்த வங்கிப் பங்குகளை விற்பனை செய்தனர். மும்பை பங்குச் சந்தையில் அதிகபட்சமாக, ஆக்சிஸ் வங்கியின் பங்கு விலை 6.86 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 2.83 சதவீதம் சரிந்தது. தனியார் துறையில் நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்கு விலை 2.34 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
அமெரிக்காவில் புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகள் அழுத்தத்துக்கு உள்ளாவது நிச்சயம் என்று முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., லார்சன் அண்ட் டூப்ரோ, ஓ.என்.ஜி.சி., ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை சரிந்தது. பார்தி ஏர்டெல், ஏஷியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி., பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் பெற்றுத் தந்தன.
வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 274 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 27,035 புள்ளிகளாக முடிவுற்றது. சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்ற 30 நிறுவனப் பங்குகளில் 24 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டம் அடைந்தன. ஆறு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு லாபத்தைப் பெற்றுத் தந்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 132.26 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 85 புள்ளிகள் சரிந்து நிஃப்டி குறியீடு 8,349 புள்ளிகளாக முடிவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com