ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் புதிய ரக குளிர்சாதன பெட்டிகள்

ப்ளூஸ்டார் நிறுவனத்தின் புதிய ரக ஸ்பிலிட் மற்றும் இன்வர்ட்டர் குளிர் சாதனப் பெட்டிகள், அத்துறையில் புதிய அளவுகோல்களை வகுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் புதிய ரக குளிர்சாதன பெட்டிகள்

ப்ளூஸ்டார் நிறுவனத்தின் புதிய ரக ஸ்பிலிட் மற்றும் இன்வர்ட்டர் குளிர் சாதனப் பெட்டிகள், அத்துறையில் புதிய அளவுகோல்களை வகுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தொடர்பாகத் தெரிவித்திருப்பதாவது:
வீட்டு அறைகளில் பயன்படுத்தும் குளிர்சானப் பெட்டிகள் பிரிவில் ப்ளூ ஸ்டார் 135-க்கும் மேற்பட்ட மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. இவற்றில் 40 மாடல்கள் புதிய இன்வர்ட்டர் ரகத்தைச் சேர்ந்தவை. செயற்திறனில் இரு நட்சத்திர முத்திரை, 3 நட்சத்திரம், 5 நட்சத்திர முத்திரை பெற்ற மாடல்கள் விற்பனையில் உள்ளன.
ப்ளூஸ்டார் நிறுவனத்தின் 5 நட்சத்திர இன்வர்ட்டர் மாடல்களில் 65 சதவீத மின் சேமிப்பு கிடைக்கிறது. மேலும் அந்த மாடல் குளிர்சாதனப் பெட்டிகளில் அரை டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் நிலையை கூட்டவோ குறைக்கவோ இயலும்.
தற்போது ஹிமாசல பிரதேசத்தில் உள்ள இரு ஆலைகளில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. விரைவில் ஜம்மு பகுதியில் உள்ள சம்பாவிலும் ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசிட்டியிலும் புதிய ஆலைகள் அமைக்கப்படவுள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அடுத்த நிதி ஆண்டில் ரூ. 33 கோடி முதலீடு செய்யவுள்ளோம் என்று அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com