ரானே பிரேக் லைனிங்ஸ் லாபம் 26% உயர்வு

ரானே பிரேக் லைனிங்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 26.3 சதவீதம் அதிகரித்ததாக அந்நிறுவனம் அறிவித்தது.

ரானே பிரேக் லைனிங்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 26.3 சதவீதம் அதிகரித்ததாக அந்நிறுவனம் அறிவித்தது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரானே குழுமத்தின் தலைவர் எல்.கணேஷ் வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது: அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 119.50 கோடியாகும். நிகர லாபம் முந்தைய ஆண்டு நிலையைக் காட்டிலும் 26% வளர்ச்சி பெற்று ரூ.9.98 கோடியைப் பெற்றுள்ளது. மூன்றாம் காலாண்டில் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு இடையிலும் வர்த்தகமும் நிகர லாபமும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் மொத்த வருவாய் ரூ. 354.02 கோடியாகும். முதல் அரையாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.30.30 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com