ஹிந்துஸ்தான் யுனிலீவர் லாபம் ரூ.1,037 கோடி

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் மூன்றாம் காலாண்டு நிகர லாபமாக ரூ. 1,037.93 கோடியைப் பெற்றதாகத் தெரிவித்தது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லாபம் ரூ.1,037 கோடி

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் மூன்றாம் காலாண்டு நிகர லாபமாக ரூ. 1,037.93 கோடியைப் பெற்றதாகத் தெரிவித்தது.
மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் அந்நிறுவனத்தின் தலைவர் ஹரீஷ் மன்வாணி தெரிவித்திருப்பதாவது:
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 8,317.94 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவுடன் ஒப்பிடுகையில், இது சற்றுக் குறைவாகும். நிகர லாபம் ரூ. 1,037.93 கோடியாக உள்ளது. சென்ற நிதி ஆண்டு நிலையைக் காட்டிலும் இது 7 சதவீத வளர்ச்சியாகும். மூன்றாம் காலாண்டில் சில்லறை விற்பனை சந்தைகளில் சற்றே தேக்க நிலை இருந்தாலும், நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அதிலிருந்து ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் விரைவில் மீண்டுவிட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com