நிப்பான் நிறுவனம் சார்பில் பசுமை பெயிண்ட் அறிமுகம்

நிப்பான் நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை பெயிண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிப்பான் நிறுவனம் சார்பில் பசுமை பெயிண்ட் அறிமுகம்

நிப்பான் நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை பெயிண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் அலங்கார பெயிண்ட் பிரிவுத் தலைவர் மகேஷ் ஆனந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நிப்பான் நிறுவனம் பெயிண்ட் சந்தையில் தற்போது 2 முதல் 3 சதவீத பங்கு வகித்து வருகிறது. இதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகளுக்குப் பூசப்படும் அலங்கார பெயிண்ட் வகையில் பல்வேறு தயாரிப்புகளை நிப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக, பெயிண்டுகளில் கலக்கப்படும் ரசாயனம் காரணமாக வீடுகளில் பெயிண்ட் பூசப்பட்டு சில தினங்களுக்கு வாசனை வெளியேறும். மேலும், சுவர்களில் உருவாகும் பூஞ்சை நாள்பட சுவர் முழுவதும் பரவும். தற்போது ரசாயன வாசம் இல்லாத, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில், பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு புதிய வகை பெயிண்ட்டை நிப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது திருப்பூரில் நிப்பான் பெயிண்ட் விற்பனை மற்றும் சேவைக்காக பிரத்யேக மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதே போல, தமிழகம் முழுவதும் பிரத்யேக மையம் துவக்கப்படும் என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com