ஆதித்ய பிர்லா குழுமம் ஆந்திரத்தில் ரூ.7,000 கோடி முதலீடு

ஆதித்ய பிர்லா குழுமம் ஆந்திர மாநிலத்தில் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ரூ.7,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.இதுகுறித்து அந்த குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா 
ஆதித்ய பிர்லா குழுமம் ஆந்திரத்தில் ரூ.7,000 கோடி முதலீடு

ஆதித்ய பிர்லா குழுமம் ஆந்திர மாநிலத்தில் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ரூ.7,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
இதுகுறித்து அந்த குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா  வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
ஆதித்ய பிர்லா குழுமம் ஆந்திர மாநிலத்தில், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் ஏற்கெனவே ரூ.10,000 கோடியை முதலீடு செய்துள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 11,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக ரூ.7,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம், ஆந்திரத்தில் குழுமத்தின் வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முடியும்.
ஆதித்ய பிர்லா குழுமம் அமராவதி நகரில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 50 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையை அமைத்துள்ளது. ஐடியா செல்லுலார் ஆந்திரத்தில் 80 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.
நடப்பு ஆண்டில் ரூ.1,300 கோடி முதலீட்டில் 3ஜி மற்றும் 4ஜி வசதியுடன் கூடிய 3,500 கோபுரங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளன.
நிதி சேவைத் துறையில் அதிக அளவில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com