’தங்கம் குறித்து விரிவான கொள்கை தேவை'

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் தங்கம் தொடர்பாக விரிவான கொள்கையை அறிமுகப்படுத்த தக்க தருணம் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி.ரெட்டி தெரிவித்தார்.
’தங்கம் குறித்து விரிவான கொள்கை தேவை'

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் தங்கம் தொடர்பாக விரிவான கொள்கையை அறிமுகப்படுத்த தக்க தருணம் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி.ரெட்டி தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் தங்கம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. பெரும்பாலானோர் ஏதாவது ஒரு விதத்தில் அதனை சார்ந்தே உள்ளனர்.
பல ஆயிரம் கோடி ரூபாய் புரளும் தங்க வர்த்தக சந்தையில், வாடிக்கையாளர், உற்பத்தியாளர் என ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். நிதி துறை வளர்ச்சிக்கும் தங்கத்துக்கும் முக்கியத் தொடர்பு உள்ளது. எனவே, மத்திய அரசு இதனைக் கருத்தில் கொண்டு தங்கம் வர்த்தகத்துக்கு விரிவான மற்றும் முழுமையான கொள்கையை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார் அவர்.
2015-16- நிதி ஆண்டில்தான் தங்கம் தொடர்பான சில சாதகமான அறிவிப்புகளை மத்திய அரசு முதல் முறையாக வெளியிட்டது. அதன்படி, தங்க சேமிப்பு திட்டம், ரூ. 2 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்குவோருக்கு பான் எண் கட்டாயம் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன. தங்கத்தின் மீது மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறையை எடுத்துக்காட்டுவதாக அந்த அறிவிப்புகள் அமைந்தன.
1990-ஆம் ஆண்டு நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அப்போது, அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த சமயத்தில் மத்திய அரசு கைவசமிருந்த தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கியிடம் அடகு வைத்தது. மத்திய அரசின் கைவசம் குறைந்த அளவுக்கே தங்கம் இருப்பு இருந்த நிலையில் இது எப்படி சாத்தியமானது? ஏனெனில், அடகு வைக்கப்பட்ட தங்கத்தில் பெரும்பகுதி கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில் கடத்தல்காரர்கள் நமக்கு பெரும் உதவியாக இருந்துள்ளனர் என்று ஒய்.வி.ரெட்டி வேடிக்கையாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com