பட்ஜெட் எதிர்பார்ப்பு நிறுவன வரி குறையுமா?

மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வருமான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பட்ஜெட் எதிர்பார்ப்பு நிறுவன வரி குறையுமா?

மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வருமான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் நிறுவன வரியை 25 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை கடந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ளது.
இருப்பினும், இந்த நடவடிக்கை மிக மெதுவாக உள்ளதாகவும், இதுவரையில் புதிய வரி விதிப்புக்குள் சில நிறுவனங்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பிப்ரவரி 1-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் அதற்கு தீர்வு காணப்படவேண்டும். நிறுவனங்களுக்கான வருமான வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை தொழில்துறை கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
வீட்டு வசதி உள்ளிட்ட அனைத்து துறை நிறுவனங்களும் எளிதாக கடன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வட்டி விகிதத்தையும் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், முதலீட்டுக்கான தேவை ஊக்குவிக்கப்படும் என்பதுடன் நிறுவனங்களிடையே நம்பிக்கையும் அதிகரிக்கும் என்று பிக்கி அமைப்பின் தலைவர் பங்கஜ் படேல் தெரிவித்துள்ளார்.
தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைப்பதால் நுகர்வோர் செலவிடுவது அதிகரிக்கும் என்பதுடன் வரி செலுத்தும் ஆர்வத்தையும் அதிகரிக்கும். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் ஏற்பட்டுள்ள இடர்பாடான சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இதுபோன்ற நடவடிக்கை ஏதுவாக அமையும்.
தற்போது நிறுவனங்களுக்கான வரி விகிதம் 30 சதவீதமாக உள்ளது. அதனுடன், தீர்வையும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விகிதம் மத்திய பட்ஜெட்டில் 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். இதனால், பொருளாதார வளர்ச்சி உத்வேகம் பெறும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வரி தொடர்பான பிரச்னைகளுக்கு எளிதான முறையில் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com