சக்திவாய்ந்த 2 ஆயிரம் நிறுவனங்களின் பட்டியலில் 100-ல் எந்த இந்திய நிறுவனமும் இல்லை!

உலகில் உள்ள சக்திவாய்ந்த 2 ஆயிரம் நிறுவனங்களில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 50 நிறுவனங்கள் இந்தியாவில்
சக்திவாய்ந்த 2 ஆயிரம் நிறுவனங்களின் பட்டியலில் 100-ல் எந்த இந்திய நிறுவனமும் இல்லை!


உலகில் உள்ள சக்திவாய்ந்த 2 ஆயிரம் நிறுவனங்களில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 50 நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதாக போர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

உலகப் பணக்காரர்கள், அதிக சொத்துகளை வைத்திருக்கும் நிறுவனங்கள், அதிக வருமான ஈட்டும் பிரபலங்கள் என பல்வேறு பட்டியல்களை வெளியிட்டு வரும் போர்ஃப்ஸ் நாளிதழ், உலகம் முழுவதும் உள்ள 2 ஆயிரம் சக்திவாய்ந்த நிறுவனங்களை வரிசைப்படுத்தியுள்ளது. முதல் 500 நிறுவனங்களில் 12 சதவீதம் நிறுவனங்கள் சீனா மற்றும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள்.

அதில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக, சீனாவின் தொழில்துறை மற்றும் வர்த்தக வங்கி (Industrial and commercial bank) முதல் இடத்திலும், சீனா கட்டட வங்கி (China construction bank) 2-வது இடத்திலும் உள்ளன. போர்ஃப்ஸ் நாளிதழ் 2017-ம் ஆண்டு வெளியிட்ட 2 ஆயிரம் நிறுவனங்களின் பட்டியலில், 50 இந்திய நிறுவனங்கள் இருந்தபோதும், முதல் 100 இடங்களில் எந்த இந்திய நிறுவனமும் இடம்பெறவில்லை.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 106-வது இடத்தையும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, 244-வது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், எச்.டி.எஃப்.சி., இந்தியன் ஆயில், டாடா மோட்டார்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் போர்ஃப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

தற்போதைய உலகளாவிய வர்த்தக நிலப்பரப்பில் அமெரிக்க மற்றும் சீனாவின் ஆதிக்கமே தொடர்கிறது. 565 நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களும், 263  சீனா மற்றும் ஹொங்காங் நிறுவனங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

டாடா மோட்டார்ஸ் (290), ஐசிஐசிஐ வங்கி (310), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (376), என்டிபிசி (408), ஆக்சிஸ் பாங்க் (463), லார்சன் (483), பார்தி ஏர்டெல் (513) மற்றும் கோல் இந்தியா (541) நிறுவனங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சக்திவாய்ந்த 2 ஆயிரம் நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற இந்திய நிறுவனங்கள் பெயர் பட்டியல்:

1. Bharat Petroleum (583)

2. Infosys (598)

3. Kotak Mahindra Bank (744)

4. Hindustan Petroleum (807)

5. Power Grid of India (884 )

6. Mahindra & Mahindra (916)

7. HCL Technologies (958 )

8. Tata Steel (1076 )

9. Power Finance (1086 )

10. Bank of Baroda (1145)

11. Punjab National Bank (1148)

12. Hindalco Industries (1175 )

13. Canara Bank (1230 )

14. Rural Electrification(1234 )

15. Yes Bank(1239)

16. Bank of India(1250)

17. IndusInd Bank(1272)

18. GAIL India(1283)

19. JSW Steel(1347 )

20. Union Bank of India(1420)

21. Bajaj Auto(1435)

22. Adani Ports & Special Economic Zone(1513)

23. IDBI Bank(1524 )

24. Rajesh Exports(1556 )

25. Hero Motocorp(1587)

26. Grasim Industries(1622)

27. Central Bank of India(1664)

28. Lupin(1716)

29. Syndicate Bank(1745)

30. Asian Paints(1783)

31. Indian Overseas Bank(1828)

32. Allahabad Bank(1845 )

33. UCO Bank(1849)

34. Oriental Bank of Commerce(1859)

35. Steel Authority of India(1930)

36. Indiabulls Housing Finance(1934)

37. Indian Bank(1937)

38. Tech Mahindra(1998)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com