சென்செக்ஸ் 54 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்க வர்த்தக தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 54 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்க வர்த்தக தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 54 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சந்தை மதிப்பீட்டிற்கு ஏற்ப இருக்கும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தனர். இதன் காரணமாக நிஃப்டி 9,900 என்ற மைல்கல்லையும், சென்செக்ஸ் புதிய உச்சத்தையும் தொட்டு நிறைவடைந்தன.
ரியல் எஸ்டேட் துறை பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டதால் அத்துறையைச் சேர்ந்த பங்குகளின் விலை 1.28 சதவீதம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, உலோகம், தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பத் துறை பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 54 புள்ளிகள் அதிகரித்து 32,074 புள்ளிகள் என்ற புதிய சாதனை அளவை எட்டியது.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 29 புள்ளிகள் உயர்ந்து வரலாற்றில் முதல் முறையாக 9,900 புள்ளிகள் என்ற மைல் கல்லை கடந்து 9,915 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com