தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவருக்கு ரூ.22.98 கோடி ஊதியம்

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு எட்டு மாத கால ஊதியமாக ரூ.22.98 கோடி வழங்கப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவருக்கு ரூ.22.98 கோடி ஊதியம்

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு எட்டு மாத கால ஊதியமாக ரூ.22.98 கோடி வழங்கப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த 1992-ஆம் ஆண்டு பணியினை தொடங்கிய சித்ரா ராமகிருஷ்ணா, படிப்படியாக பதவி உயர்வு பெற்று நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியானார். இவர் அந்தப் பொறுப்பிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி விலகினார். இவரையடுத்து, விக்ரம் லிமாயே அந்தப் பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டார்.
தேசிய பங்குச் சந்தை ரூ.10,000 கோடி மதிப்பிலான பொது பங்கு வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இதையடுத்து கடந்த நிதி ஆண்டுக்கான ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத ஊதியமாக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.22.98 கோடி வழங்கப்பட்டது. கடந்த 2015-16 நிதி ஆண்டில் வழங்கப்பட்ட ஊதியம் ரூ.7.87 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
1992-இல் தேசிய பங்குச் சந்தை உருவாக்கப்பட்டதிலிருந்து அந்த அமைப்பில் சித்ரா ராமகிருஷ்ணா பணியாற்றி வந்தார்.
தேசிய பங்கு சந்தையின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் லிமாயே ஊதியமாக ரூ.8 கோடி பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com