மொபைல் டேட்டா பயன்பாடு 142% உயர்வு

இந்தியாவில் தனிநபர் மொபைல் டேட்டா (இணையதளம்) பயன்பாடு 142 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொபைல் டேட்டா பயன்பாடு 142% உயர்வு

இந்தியாவில் தனிநபர் மொபைல் டேட்டா (இணையதளம்) பயன்பாடு 142 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நீதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் சனிக்கிழமை சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் (2014-17) மட்டும் தனிநபர் மொபைல் டேட்டா பயன்பாடு ஆண்டுக்காண்டு 142 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
மேலும், இணையதளத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு நபரின் ஆன்லைன் வாயிலான வங்கி பரிவர்த்தனையும் 17 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
அதுமட்டுமின்றி மின்னணு பணப்பை (டிஜிட்டல் வாலட்) பரிவர்த்தனை அனைவரும் வியக்கும் வகையில் 200 மடங்கு உயர்ந்துள்ளதாக அமிதாப் காந்த் சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com