புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது.
புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நேரடி பதிவு விதிமுறைகளை தளர்த்த செபி திட்டமிட்டுள்ளது. இதுதவிர, ஸ்டார்ட் அப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை விரைவாக பட்டியலிடும் நடைமுறைகளை உருவாக்கும் முயற்சியிலும் செபி ஈடுபட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிக அளவில் ஈர்க்க இதுபோன்ற நடவடிக்கைகளை செபி தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
வாராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக, வங்கிகளில் பெரும்தொகையை கடனாகப் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது திவால் சட்ட நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் பங்குச் சந்தை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக அதிகரித்தன.
ஜி.எஸ்.டி. ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ததுடன், நிறுவனங்கள் வருமான கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. பங்குச் சந்தைகளில் இதுவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
பிரான்ஸ் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது, பிரிட்டன் பிரெக்ஸிட் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியது உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றதுக்கு பக்கபலமாக இருந்தது.
முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்பட்டதையடுத்து, உலோகத் துறை பங்குகள் விலை சராசரியாக 1.89 சதவீதம் அதிகரித்தது. ஹெச்.டி.எப்.சி., வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி பங்குகளின் விலை 1.94 சதவீதம் வரை அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 255 புள்ளிகள் அதிகரித்து 31,311 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதன் மூலம், ஜூன் 5-ஆம் தேதி சென்செக்ஸ் 31,309 புள்ளிகளை எட்டிய வரலாற்று சாதனை முறியடிக்கப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 9,657 புள்ளிகளை எட்டியது. இதன் மூலம் நிஃப்டி மீண்டும் 9,600 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com