பருப்பு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு

நெல் மற்றும் பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
பருப்பு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு

நெல் மற்றும் பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

கரீப் பருவத்தில் (கோடைகால பயிர்) மேற்கொள்ளப்படும் 14 வகையான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஜூன் 7-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இருப்பினும், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இதுகுறித்த முடிவை மத்திய அரசு வெளியிடாமல் இருந்தது.
இந்த நிலையில், மத்திய வேளாண் அமைச்சகம், 2017-18 பருவத்துக்கான (ஜூலை-ஜூன்) கரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தும் முடிவு குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் தற்போது கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
விதைப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு பருவமழையும் வழக்கமான அளவிலேயே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த சமயத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு என்பது விவசாயிகளுக்கு உதவிகரமாகவும், என்ன பயிரிடலாம் என்பது குறித்து தெளிவான முடிவெடுக்கவும் உதவும்.
நெல் கொள்முதலுக்கான மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.80 அதிகரிக்கப்பட்டு ரூ.1,550-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.400 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.5,050-லிருந்து அதிகரிக்கப்பட்டு ரூ.5,450-ஆகவும், பாசிப் பருப்புக்கான ஆதரவு விலை ரூ.5,225-லிருந்து உயர்த்தப்பட்டு (போனஸ் உள்பட) ரூ.5,575-ஆகவும், உளுத்தம் பருப்புக்கான ஆதரவு விலை ரூ.400 அதிகரிக்கப்பட்டு ரூ.5,400-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவைதவிர, பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.160 உயர்த்தப்பட்டு ரூ.4,020-ஆகவும், சோயாவுக்கான ஆதரவு விலை ரூ.275 அதிகரிக்கப்பட்டு ரூ.3,050-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com