ஜிஎஸ்டி பலன் வாடிக்கையாளர்களுக்கே!

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் வரி குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக டிவிஎஸ் மோட்டார்ஸ், ராயல் என்ஃபீல்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஜிஎஸ்டி பலன் வாடிக்கையாளர்களுக்கே!

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் வரி குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக டிவிஎஸ் மோட்டார்ஸ், ராயல் என்ஃபீல்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக, இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பாகவே பல நிறுவனங்கள் வரிக் குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதாக அடுத்தடுத்து விலைக் குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தன.
அந்த வரிசையில், டிவிஎஸ் நிறுவனமும் பல்வேறு மாடல்களுக்கான விலையை ரூ.1,600-ரூ.2,300 வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலைக் குறைப்பு மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனம் அதன் பலனை நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம் என டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கே.என். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இருசக்கர வாகனங்களின் விலையை ரூ.2,300 வரை அதிரடியாக குறைத்துள்ளது.
இருசக்கர வாகனங்கள் மீது தற்போது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் வரி விகிதம் 28 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 350 சிசி-க்கு மேலான வாகனங்களுக்கு கூடுதலாக 3 சதவீத வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பஜாஜ் நிறுவனம் சிடி100 முதல் டோமினார் வரையிலான பல்வேறு இருசக்கர வாகனங்களின் விலையை ரூ.4,500 வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோன்று யுஎம் லோஹியா நிறுவனமும் அதன் இரண்டு மாடல் ஸ்கூட்டர்களுக்கான விலையை ரூ.5,700 வரை குறைத்துள்ளது. இவைதவிர, ஃபோர்டு இந்தியா, ஆடி, பி.எம்.டபிள்யூ., மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கார்களின் விலையை ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரையில் குறைப்பதாக அறிவித்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com