62 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ரத்து செய்ய பரிசீலனை: வர்த்தக அமைச்சகம்

கொச்சின் போர்ட் டிரஸ்ட் உள்ளிட்ட 62 சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை ரத்து செய்வது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
62 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ரத்து செய்ய பரிசீலனை: வர்த்தக அமைச்சகம்

கொச்சின் போர்ட் டிரஸ்ட் உள்ளிட்ட 62 சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை ரத்து செய்வது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
மத்திய வர்த்தக செயலர் ரீட்டா தியோதியா தலைமையிலான ஒப்புதல் குழு கூட்டம் வரும் ஜூலை 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க முதல்கட்ட அனுமதி பெற்ற மேம்பாட்டாளர்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி கடிதம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. இதிலிருந்து, அந்தத் திட்டங்களை நிறைவேற்ற அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. நடைபெறவுள்ள ஒப்புதல் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்து இறுதி முடிவெடுக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொச்சின் போர்ட் டிரஸ்ட், கேரளத்தில் தடையில்லா வர்த்தகம் மற்றும் கிடங்கு மண்டலங்களை அமைக்க திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், அந்த திட்டத்தை மேற்கொண்டு தொடர முடியாத நிலையில் உள்ளதாக அந்நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவித்தது.
இதையடுத்து, கொச்சின் போர்ட் டிரஸ்ட் சிறப்பு பொருளாதாரத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி கொச்சி சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான மேம்பாட்டு ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.
நாட்டின் முக்கிய ஏற்றுமதி முனையங்களாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவெடுத்த வந்தன. இந்த நிலையில், மத்திய அரசு குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) மற்றும் ஈவுத்தொகை பகிர்வுக்கான வரி விதித்ததைத் தொடர்ந்து அந்த மண்டலங்கள் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன.
இதையடுத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2016-17-ஆம் நிதி ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலான ஏற்றுமதி 12 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.5.24 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ரூ.5.24 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாகவும், 17.31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மே 1 நிலவரப்படி, மத்திய அரசு 421 சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், அதில் 218 மண்டலங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com