சென்செக்ஸ் 179 புள்ளிகள் வீழ்ச்சி

சாதகமற்ற நிலவரங்களால் மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 179 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.

சாதகமற்ற நிலவரங்களால் மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 179 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. நடப்பு ஜூன் மாதத்தில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு சரிவைக் காண்பது இதுவே முதல் முறை.

வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். ஜூன் மாதத்துக்கான பங்கு முன்பேர வணிக ஒப்பந்தம் முடிவடையும் காலம் நெருங்கி வருவதன் காரணமாகவும் பங்கு வர்த்தகத்தில் ஒருவித மந்த நிலை நிலவியது.
வங்கிகள் கடனுக்கான இடர்பாட்டு ஒதுக்கீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. இது, வங்கியின் வருவாயின் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால் வங்கிப் பங்குகளுக்கு சந்தையில் வரவேற்பு குறைந்தது.
குறிப்பாக, பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கிப் பங்கின் விலை 3.27% வீழ்ச்சியடைந்து ரூ.279.40-ஆனது.
இதனைத் தொடர்ந்து, ஆக்சிஸ் வங்கி பங்கின் விலை 2.34% குறைந்து ரூ.492.80-ஆகவும், ஐ.சி.ஐ.சி.ஐ. பங்கின் விலை 1.20% சரிந்து ரூ.288-ஆகவும், கோட்டக் மஹிந்திரா பங்கு 1.13% குறைந்து ரூ.974-ஆகவும், ஹெச்.டி.எஃப்.சி. பங்கின் விலை 0.63% சரிந்து ரூ.1,667.90-ஆகவும் காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 179 புள்ளிகள் சரிந்து 30,958 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 63 புள்ளிகள் குறைந்து 9,511 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com