பிராமல் எண்டர்பிரைசஸ்: கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்டுகிறது

பல்வேறுபட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிராமல் குழுமத்தின் பிராமல் எண்டர்பிரைசஸ் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடியை திரட்ட உள்ளது.

பல்வேறுபட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிராமல் குழுமத்தின் பிராமல் எண்டர்பிரைசஸ் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடியை திரட்ட உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தனிப்பட்ட முறையில் நிதி நிறுவனங்களுக்கு பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்து ரூ.500 கோடி திரட்ட திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக , இயக்குநர்கள் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த திட்டத்துக்கு நிர்வாகக் குழ ஒப்புதல் அளித்தது. இந்தக் கடன்பத்திரங்கள் அனைத்தும் தேசிய பங்குச் சந்தையில் உள்ள மொத்தவிலை கடன் சந்தையில் பட்டியலிடப்படும் என்று பிராமல் எண்டர்பிரைசஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிதி எந்த நோக்கத்திற்காக திரட்டப்படுகிறது என்பதை அந்நிறுவனம் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
பிராமல் குழுமத்தின் முக்கிய அங்கமான பிராமல் எண்டர்பிரைசஸ், நிதி சேவை, மருந்து ஆகிய துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் 30}க்கும் மேலான நாடுகளில் வர்த்தக செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com