மாருதி சுஸூகி கார் விற்பனை 19% அதிகரிப்பு

இந்தியாவில் வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார் விற்பனை சென்ற ஏப்ரல் மாதத்தில் 19.5 சதவீதம் அதிகரித்தது.
மாருதி சுஸூகி கார் விற்பனை 19% அதிகரிப்பு

இந்தியாவில் வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார் விற்பனை சென்ற ஏப்ரல் மாதத்தில் 19.5 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மாருதி சுஸூகி சென்ற ஏப்ரலில் 1,51,215 கார்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 1,26,569 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 19.5 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டு சந்தையில் கார் விற்பனை 23.4 சதவீதம் அதிகரித்து 1,44,492-ஆக இருந்தது.
ஆல்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட குறைந்த விலை பிரிவிலான கார் விற்பனை 21.9 சதவீதம் உயர்ந்து 38,897-ஆக இருந்தது. ஸ்விஃப்ட், எஸ்டிலோ, டிசையர், பலேனோ, இக்னிஸ் வகை கார் விற்பனை 39.1 சதவீதம் உயர்ந்து 63,584-ஆக காணப்பட்டது.
நடுத்தர சொகுசு வகை காரான சியாஸ் விற்பனை 23.2 சதவீதம் அதிகரித்து 7,024-ஆக இருந்தது.
எர்டிகா, எஸ்-கிராஸ், விஸ்டாரா, பிரெஸ்ஸா உள்ளிட்டவற்றின் விற்பனை 16,044 என்ற எண்ணிக்கையிலிருந்து 28.6 சதவீதம் வளர்ச்சி கண்டு 20,638-ஆக காணப்பட்டது. அதேசமயம், ஆம்னி, ஈகோ ஆகியவற்றின் விற்பனை 4 சதவீதம் குறைந்து 13,938-ஆக இருந்தது.
வெளிநாட்டு சந்தைகளுக்கான கார் ஏற்றுமதியும் ஏப்ரலில் 29.4 சதவீதம் சரிவடைந்து 6,723-ஆக காணப்பட்டது என்று மாருதி சுஸýகி அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஹுண்டாய்
ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை சென்ற ஏப்ரல் மாதத்தில் 3.57 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் (விற்பனை & சந்தைப்படுத்தல்) ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
ஹுண்டாயின் எக்ùஸன்ட், கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா மாடல் கார்களுக்கு வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பு காணப்படுகிறது.
அதன் காரணமாக, ஏப்ரல் மாதத்தில் கார் விற்பனை 56,368-ஆக இருந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரலில் விற்பனையான 44,758 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 3.57 சதவீத வளர்ச்சியாகும்.
உள்நாட்டு சந்தையில் கார் விற்பனை 42,351 என்ற எண்ணிக்கையிலிருந்து 5.68 சதவீதம் உயரந்து 44,758-ஆக காணப்பட்டது.
அதேசமயம், சர்வதேச சந்தைகளுக்கான கார் ஏற்றுமதி 3.8 சதவீதம் குறைந்து 11,610-ஆக இருந்தது என்றார் அவர்.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸின் வாகன விற்பனை ஏப்ரல் மாதத்தில் 21 சதவீதம் சரிந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மயங்க் பாரீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பி.எஸ்.-3 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக ஏப்ரல் மாத வாகன விற்பனை எதிர்பாராத விதத்தில் சரிந்தது. அதிலும் குறிப்பாக வர்த்தக வாகன விற்பனையில் அந்த தடை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.
சென்ற ஏப்ரலில் ஒட்டுமொத்த வாகன விற்பனை 21 சதவீதம் சரிந்து 30,972-ஆனது. கடந்த ஆண்டு இதே மாத கால அளவில் வாகன விற்பனை 39,389-ஆக காணப்பட்டது.
உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை 23 சதவீதம் உயர்ந்து 12,827-ஆக இருந்தது. அதேசமயம், வர்த்தக வாகனங்கள் விற்பனை 36 சதவீதம் வீழ்ச்சியடைந்து 16,017-ஆக காணப்பட்டது.
வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மே மற்றும் ஜூன் மாதங்களில் சூடுபிடிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com