ரானே பிரேக் லைனிங்ஸ் லாபம் ரூ.4.41 கோடி

சென்னையைச் சேர்ந்த ரானே குழுமத்தின் துணை நிறுவனமான ரானே பிரேக் லைனிங்ஸ் நான்காம் காலாண்டு லாபம் ரூ.4.41 கோடியாக இருந்தது.
ரானே பிரேக் லைனிங்ஸ் லாபம் ரூ.4.41 கோடி

சென்னையைச் சேர்ந்த ரானே குழுமத்தின் துணை நிறுவனமான ரானே பிரேக் லைனிங்ஸ் நான்காம் காலாண்டு லாபம் ரூ.4.41 கோடியாக இருந்தது.
இதுகுறித்து ரானே குழுமத்தின் தலைவர் எல். கணேஷ் தெரிவித்ததாவது:
சென்ற 2016-17 நிதி ஆண்டின் ஜனவரி-மார்ச் நான்காவது காலாண்டில் ரானே பிரேக் லைனிங்ஸ் நிறுவனம் ரூ.135.36 கோடி வருவாய் ஈட்டியது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.125.71 கோடியாக காணப்பட்டது.
அதேசமயம், நிகர லாபம் ரூ.9.13 கோடியிலிருந்து குறைந்து ரூ.4.41 கோடியாக இருந்தது.
சென்ற முழு நிதி ஆண்டில் வருவாய் ரூ.451.64 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.491.95 கோடியாகவும், நிகர லாபம் ரூ.25.75 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.34.71 கோடியாகவும் காணப்பட்டது.
சென்ற நிதி ஆண்டுக்கு ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.9 இறுதி ஈவுத்தொகை வழங்க இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக எல். கணேஷ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com