ஜி.எஸ்.டி. வரி விகிதம் அறிவிப்பு எதிரொலி: சென்செக்ஸ் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் ஏற்றமும், நிஃப்டி சரிவையும் கண்டது.

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் ஏற்றமும், நிஃப்டி சரிவையும் கண்டது.
சோப்பு, பற்பசை, கூந்தல் எண்ணெய் உள்ளிட்ட பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் வரி விகிதத்தை நிர்ணயித்தது. இதன் காரணமாக, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை பின்பு ஓரளவு இயல்பு நிலைமைக்கு திரும்பியது.
வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சராசரியாக 1.86% அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, வங்கி, தொலைத்தொடர்புத் துறை பங்குகளுக்கும் அதிக வரவேற்பு காணப்பட்டது. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய்-எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மோட்டார் வாகன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 30 புள்ளிகள் அதிகரித்து 30,464 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 1.55 புள்ளிகள் குறைந்து 9,427 புள்ளிகளாக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com