கார்ப்பரேஷன் வங்கி லாபம் ரூ.160 கோடி

பொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.160 கோடியாக இருந்தது.
கார்ப்பரேஷன் வங்கி லாபம் ரூ.160 கோடி

பொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.160 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் கார்ப்பரேஷன் வங்கியின் வருவாய் ரூ.5,730.48 கோடியாக இருந்தது.
2015-16 நிதி ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.510.9 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவில் வங்கி ரூ.159.98 கோடி லாபம் ஈட்டியது.
வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 9.98 சதவீதத்திலிருந்து அதிகரித்து 11.70 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 6.53 சதவீதத்திலிருந்து உயர்ந்து 8.33 சதவீதமாகவும் காணப்பட்டது.
வாராக் கடன் அளவு அதிகரித்துள்ளபோதிலும் அதற்கான இடர்பாட்டு ஒதுக்கீட்டுத் தொகை ரூ.1,920.20 கோடியிலிருந்து சரிந்து ரூ.948.01 கோடியாக இருந்தது.
சென்ற 2016-17 முழு நிதி ஆண்டில் வருவாய் ரூ.21,146.39 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.22,561.78 கோடியாக இருந்தது.
அதேசமயம், 2015-16 நிதி ஆண்டில் ரூ.506.48 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில் சென்ற நிதி ஆண்டில் ரூ.561.20 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக கார்ப்பரேஷன் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com