பி.எஸ்-4 தரத்தில் டாடா மோட்டார்ஸின் புதிய லாரி

வர்த்தக வாகன விற்பனையில் முன்னிலையில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பி.எஸ்-4 தொழில்நுட்பத்தில் நடுத்தர மற்றும் கனரக லாரிகளை அறிமுகப்படுத்தியது.
பி.எஸ்-4 தரத்தில் டாடா மோட்டார்ஸின் புதிய லாரி

வர்த்தக வாகன விற்பனையில் முன்னிலையில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பி.எஸ்-4 தொழில்நுட்பத்தில் நடுத்தர மற்றும் கனரக லாரிகளை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன பிரிவு) ராஜேஷ் கவுல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிறிய ரக வர்த்தக வாகனங்கள் முதல் கனரக வர்த்தக வாகனங்கள் வரையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாகனங்களைத் தயாரிப்பதில் டாடா மோட்டார்ஸ் முன்னோடியாகத் திகழ்கிறது.
அண்மையில் அமல்படுத்தப்பட்ட புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி இந்த லாரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. "வெளியேறும் புகை மறுசுழற்சி' மற்றும் "தேர்ந்தெடுக்கப்பட்ட வினையூக்கி குறைப்பு' உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் இதில் புகுத்தப்பட்டுள்ளன.
பி.எஸ்-4 தரக் கட்டுப்பாட்டு விதிமுறையின் கீழ் தயாரிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மாடல் லாரிகள் சேலத்தில் நடைபெற்ற "டிரக் வேர்ல்டு' கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன. சரக்குப் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் முதலிடத்தில் உள்ளதுடன், ரஷியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் பி.எஸ்-4 விதிமுறை அமலாவதற்கு முன்பாகவே யூரோ-4 மற்றும் யூரோ-5 தொழில்நுட்பத்துக்கு ஏற்ப டாடா மோட்டார்ஸ் வாகனங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com