டாடா ஸ்டீல் லாபம் ரூ.1,017 கோடி

டாடா ஸ்டீல் செப்டம்பர் காலாண்டில் ரூ.1,017.78 கோடி லாபம் ஈட்டியது.
டாடா ஸ்டீல் லாபம் ரூ.1,017 கோடி

டாடா ஸ்டீல் செப்டம்பர் காலாண்டில் ரூ.1,017.78 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.வி. நரேந்திரன் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு செயல்பாடு அனைத்து வகையிலும் வலுவானதாக உள்ளது. பல்வேறு பிரிவுகளில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 27 புதிய தயாரிப்புகள் இக்காலாண்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் விற்பனையின் வாயிலாக ரூ.32,717.35 கோடி வருவாயை ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.27,228.50 கோடியாக காணப்பட்டது. செலவினம் ரூ.26,866.49 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.30,566.68 கோடியானது.
கடந்த நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் ரூ.49.38 கோடி நிகர இழப்பை கண்டிருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் லாப பாதைக்கு திரும்பி ரூ.1,017.78 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com