சாந்தி கியர்ஸ் விற்றுமுதல் ரூ.54 கோடியாக அதிகரிப்பு

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சாந்தி கியர்ஸ் விற்றுமுதல் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ரூ.54.31 கோடியாக அதிகரித்தது. கடந்த நிதி ஆண்டின்

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சாந்தி கியர்ஸ் விற்றுமுதல் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ரூ.54.31 கோடியாக அதிகரித்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் விற்றுமுதல் ரூ.50.85 கோடியாக காணப்பட்டது.
வரிக்கு முந்தைய லாபம் ரூ.9.19 கோடியிலிருந்து 5 சதவீதம் அதிகரித்து ரூ.9.63 கோடியாக இருந்தது. நிறுவனத்துக்கு கிடைத்த வர்த்தக ஆணைகளின் மதிப்பு ரூ.45 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.58 கோடியாக உள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.15.82 கோடியிலிருந்து 4 சதவீதம் அதிகரித்து ரூ.16.51 கோடியாக இருந்தது என சாந்தி கியர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com