டிவிஎஸ் மோட்டார் வருவாய் 18% வளர்ச்சி

சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 18.2 சதவீதம் அதிகரித்தது.
டிவிஎஸ் மோட்டார் வருவாய் 18% வளர்ச்சி

சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 18.2 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: டிவிஎஸ் மோட்டார் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.4,097.99 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,465.69 கோடியுடன் ஒப்பிடும்போது இது 18.2 சதவீத வளர்ச்சியாகும்.
வரிக்கு முந்தைய லாபம் ரூ.234.04 கோடியிலிருந்து 26.8 சதவீதம் அதிகரித்து ரூ.296.79 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.177.39 
கோடியிலிருந்து 20.2 சதவீதம் உயர்ந்து ரூ.213.16 கோடியாகவும் இருந்தது என டிவிஎஸ் மோட்டார் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com