சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.285 கோடி

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.285 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக சிட்டி யூனியன் வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான என்.காமகோடி கூறினார்.
சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.285 கோடி

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.285 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக சிட்டி யூனியன் வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான என்.காமகோடி கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.56, 270 கோடியாக உள்ளது. வங்கியின் வைப்புத் தொகை ரூ.30,882 கோடியாக உள்ளது. 
முதல் அரையாண்டில் வங்கியானது ரூ.617 கோடியை மொத்த லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் அரையாண்டைக்காட்டிலும் 31 சதவீதம் அதிகம். 
வங்கியின் நிகர லாபம் ரூ.285 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகமாகும். வங்கியின் வாராக் கடன் விகிதம் 1.76 சதவீதமாக உள்ளது. 
சிட்டி யூனியன் வங்கி இதுவரை 558 கிளைகளையும், 1,573 ஏடிஎம்-களையும் திறந்துள்ளது என்றார் காமகோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com