பாரத ஸ்டேட் வங்கி லாபம் ரூ.1,840 கோடி

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) இரண்டாம் காலாண்டு மொத்த லாபம் பன்மடங்கு அதிகரித்து ரூ.1,840.43 கோடியானது.
பாரத ஸ்டேட் வங்கி லாபம் ரூ.1,840 கோடி

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) இரண்டாம் காலாண்டு மொத்த லாபம் பன்மடங்கு அதிகரித்து ரூ.1,840.43 கோடியானது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது (ஜூலை-செப்டம்பர்) காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி தனிப்பட்ட முறையில் ரூ.65,429.63 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.50,742.9 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த அடிப்படையில் வங்கியின் வருவாய் ரூ.72,918.4 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.74,948.52 கோடியானது.
நிகர லாபம் 20.70 கோடியிலிருந்து பல மடங்கு அதிகரித்து ரூ.1,840.43 கோடியானது. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸில் பாரத ஸ்டேட் வங்கி வைத்திருந்த பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.8,400 கோடி திரட்டப்பட்டது. அதன் காரணமாகவே லாபம் இந்த அளவுக்கு அதிகரித்தது.
இருப்பினும், தனிப்பட்ட முறையில் பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் ரூ.2,538.32 கோடியிலிருந்து 37.9 சதவீதம் சரிந்து ரூ.1,581.55 கோடியானது.
செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 7.14 சதவீதத்திலிருந்து அதிகரித்து 9.83 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 4.19 சதவீதத்திலிருந்து உயர்ந்து 5.43 சதவீதமாகவும் இருந்தது.
வாராக் கடன் அதிகரிப்பையடுத்து, அதன் இடர்பாட்டை எதிர்கொள்வதற்காக வங்கியின் சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.7,669.66 கோடியிலிருந்து இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து ரூ.16,715.20 கோடியாக இருந்தது என்று பாரத ஸ்டேட் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com