கிராமங்களை இணைக்கும் பாரத் நெட்!

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்பது காந்தியடிகளின் நிலைப்பாடு. ஏனெனில், அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விவசாயம் அங்குதான் உள்ளது.
கிராமங்களை இணைக்கும் பாரத் நெட்!

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்பது காந்தியடிகளின் நிலைப்பாடு. ஏனெனில், அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விவசாயம் அங்குதான் உள்ளது. கிராமங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்பது பொதுக் கருத்து. 

வேளாண் தொழில் மட்டும் அல்லாமல் அதி நவீன தொழில்நுட்பங்களும் அங்குபரவ வேண்டும் என்று உணர்ந்த மத்திய அரசு, கிராமங்களில் பிராட்பேண்ட் எனப்படும் அதிவேக இணைய சேவை அளிக்கும் "பாரத்நெட்' திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாகியுள்ளது. ஒவ்வொரு கிராமங்களையும் இணைய வலையத்துக்குள் கொண்டு வருவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கலாம் என்பது மத்திய அரசின் அசைக்க முடியாத நம்பிக்கை. 
ரூ.45,000 கோடி செலவில் கட்டமைக்கப்படவுள்ள பாரத் நெட் திட்டத்தின் முக்கிய நோக்கம், 10 லட்சம் கிலோமீட்டரிலுள்ள 1.5 லட்சம் கிராமங்களுக்கான இணைய சேவையை தற்போதுள்ள சந்தை விலையைக் காட்டிலும் 75 சதவீத மலிவான விலையில் வழங்குவதே. பாரத் நெட் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. அவை, இந்த ஆண்டுடன் நிறைவு பெறவுள்ளது. இதற்காக, ரூ.11,200 கோடி செலவிடப்பட்டு, 1 லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்படவுள்ளன. 
கிராமங்களில் இணைப்பக வசதி ஏற்படுத்தப்பட்ட பின்பு பிராட்பேண்ட் மற்றும் வைஃபை சேவைகள் தொடங்கப்படும். முற்றிலும், உள்நாட்டுத் தயாரிப்புகளைக் கொண்டே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது இதன் சிறப்பம்சம். 
பாரத்நெட் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளும் இந்த வாரம் தொடங்குகின்றன. இதற்காக, மத்திய அரசு ரூ.34,000 கோடியை ஒதுக்கியுள்ளது. முதல்கட்ட பணியில் இடம்பெறாத அஸ்ஸôம், ஹரியாணா, சிக்கிம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய எட்டு மாநிலங்களில் கண்ணாடி இழை பதிக்கும் பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது. ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா மாநிலங்களுக்கான ஒப்பந்த பணிகளை பவர்கிரிட் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் அனைத்து கிராமங்களையும் அதிவேக இணையசேவைக்குள் கொண்டு வருவதே முக்கிய குறிக்கோள். மத்திய அரசின் நிதி உதவியுடன் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத், சத்திஸ்கர், ஆந்திரம், தெலங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய ஏழு மாநிலங்களுடன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.
பாரத்நெட் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவுறும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.4.5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்கிறார் தொலைத்தொடர்புத் துறை செயலர் அருணா சுந்தரராஜன். இந்தியாவில் இணைய பயன்பாடு 10 சதவீதம் அதிகரிக்கும்போதும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 சதவீதம் ஏற்றம் காணும் என்கிறது ஓர் ஆய்வு.
பாரத்நெட் திட்டத்தில் இணைந்து தொலைத்தொடர்பு சேவை வழங்க ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், வோடஃபோன் நிறுவனங்கள் ஆர்வத்துடன் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com