என்டிபிசி லாபம் 2.3 சதவீதம் சரிவு

பொதுத் துறையைச் சேர்ந்த என்டிபிசி நிறுவனத்தின் லாபம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 2.3 சதவீதம் சரிந்தது.
என்டிபிசி லாபம் 2.3 சதவீதம் சரிவு

பொதுத் துறையைச் சேர்ந்த என்டிபிசி நிறுவனத்தின் லாபம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 2.3 சதவீதம் சரிந்தது.
 இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: என்டிபிசி நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.19,960.35 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.19,588.56 கோடியாக காணப்பட்டது.
 தேய்மானங்களுக்கான செலவினம் ரூ.1,434.15 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,712.68 கோடியாகவும், நிதி செலவினம் ரூ.889.83 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.919.47 கோடியாகவும் இருந்தது. செலவின அதிகரிப்பையடுத்து, நிகர லாபம் ரூ.2,496.98 கோடியிலிருந்து 2.3 சதவீதம் சரிந்து ரூ.2,438.60 கோடியானது. ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான அரையாண்டில் வருவாய் ரூ.38,809.36 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.40,502.28 கோடியாகவும், நிகர லாபம் ரூ.4,836.60 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.5,056.77 கோடியாகவும் இருந்தது என என்டிபிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com