டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் லாபம் 36% அதிகரிப்பு

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (முன்பு டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா) செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் 36 சதவீதம் அதிகரித்தது.
டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் லாபம் 36% அதிகரிப்பு

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (முன்பு டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா) செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் 36 சதவீதம் அதிகரித்தது.
 இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (டிஐஎஃப்ஹெச்எல்) செப்டம்பர் காலாண்டில் அனைத்துப் பிரிவு செயல்பாடு மூலம் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.146 கோடியாக இருந்தது.
 கடந்த ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.107 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். வரிக்கு முந்தைய தனிப்பட்ட லாபம் ரூ.13.52 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.24.84 கோடியாக காணப்பட்டது.
 டிஐஎஃப்ஹெச்எல்-ல் 46.2 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ள சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.5,492 மதிப்பிலான கடன்களை வழங்கியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வழங்கப்பட்ட கடனான ரூ.4,444 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 24 சதவீதம் அதிகம். வரிக்கு பிந்தைய லாபம் ரூ.168 கோடியிலிருந்து 36 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.228 கோடியானது. நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 13 சதவீதம் அதிகரித்து ரூ.37,450 கோடியாக இருந்தது.
 60 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் மொத்த பிரீமியம் வாயிலாக ரூ.1,277 கோடி ஈட்டியது. கடந்த ஆண்டில் ஈட்டிய பிரீமியமான ரூ.824 கோடியுடன் ஒப்பிடும்போது இது 55 சதவீதம் அதிகம். வரிக்கு பிந்தைய லாபம் ரூ.57 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.67 கோடியானது.
 டிஐஎஃப்ஹெச்எல்-ல் 49.5 சதவீத பங்குகளை வைத்துள்ள கூட்டு நிறுவனமான சோழமண்டலம் எம்எஸ் ரிஸ்க் சர்வீசஸ் வருவாய் ரூ.7.50 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.12.15 கோடியானது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1.75 கோடியாக இருந்தது.
 கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.1.54 கோடி இழப்பை கண்டிருந்தது என டிஐஎஃப்ஹெச்எல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com