கரூர் வைஸ்யா வங்கி லாபம் ரூ. 76 கோடியாக சரிவு

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ.76 கோடியாக சரிந்தது.
கரூர் வைஸ்யா வங்கி லாபம் ரூ. 76 கோடியாக சரிவு

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ.76 கோடியாக சரிந்தது.
இதுகுறித்துஅந்த வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் வைஸ்யா வங்கி நடப்பு நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிகர வட்டி வருவாய் மூலம் ரூ.555 கோடி ஈட்டியது. கடந்த நிதி ஆண்டில் ஈட்டிய வட்டி வருவாய் ரூ.495 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 12.13 சதவீதம் அதிகம். வட்டி சாராத வருவாய் ரூ.218 கோடியிலிருந்து 5.64 சதவீதம் அதிகரித்து ரூ.230 கோடியானது. வாடிக்கையாளர் சேவையின் மூலம் கிடைக்கும் அடிப்படை கட்டண வருவாய் ரூ.116 கோடியிலிருந்து 28.24 சதவீதம் அதிகரித்து ரூ.149 கோடியானது.
செயல்பாட்டு லாபம் 11.58 சதவீதம் அதிகரித்து ரூ.427 கோடியாக இருந்தது. அதேசமயம், நிகர லாபம் ரூ.126 கோடியிலிருந்து சரிந்து ரூ.76 கோடியானது.
செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டில் நிகர வட்டி வருவாய் ரூ.976 கோடியிலிருந்து 12.04 சதவீதம் அதிகரித்து ரூ.1,094 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.273 கோடியிலிருந்து சரிந்து ரூ.224 கோடியானது.
செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.29 சதவீதத்திலிருந்து அதிகரித்து 3.24 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1.44 சதவீதத்திலிருந்து உயர்ந்து 3.24 சதவீதமாகவும் இருந்தது.
வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.91,539 கோடியிலிருந்து 9.94 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,00,637 கோடியாக உள்ளது.
செப்டம்பர் நிலவரப்படி வங்கிக்கு 752 கிளைகளும், 1766 ஏடிஎம்களும் உள்ளதாக கரூர் வைஸ்யா வங்கி அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com