தங்கம் இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து ரூ.422 கோடி வெளியேற்றம்

தங்கம் இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து ஏப்ரல்-அக்டோபர் மாத கால அளவில் ரூ.422 கோடி மதிப்பிலான தொகை வெளியேறியது.

தங்கம் இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து ஏப்ரல்-அக்டோபர் மாத கால அளவில் ரூ.422 கோடி மதிப்பிலான தொகை வெளியேறியது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
தங்கம் மற்றும் இதர முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும், பங்கு முதலீட்டின் வாயிலாக கிடைக்கும் வருவாய் அதிகரித்து வருவதையடுத்து, தங்கம் இ.டி.எஃப். திட்டங்களில் மேற்கொள்ளும் முதலீடு படிப்படியாக குறைந்து வருகிறது.
குறிப்பாக, கடந்த 2013-14இல் இவ்வகை திட்டங்களிலிருந்து ரூ.2,293 கோடியும், 2014-15இல் ரூ.1,475 கோடியும், 2015-16இல் ரூ.903 கோடியும், 2016-17இல் ரூ.775 கோடியும் வெளியேறியுள்ளது.
இந்த நிலையில் பங்குச் சந்தை நடப்பு ஆண்டில் வராற்று உச்சத்தை தொட்டதையடுத்து, 14 வகையான தங்கம் இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து ஏப்ரல்-அக்டோபர் கால அளவில் ரூ.422 கோடி வெளியேறியுள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் வெளியேறிய தொகை ரூ.519 கோடியாக காணப்பட்டது.
முதலீட்டாளர்கள் தங்கத்தை தவிர்த்து பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களில் (இஎல்எஸ்எஸ்) ஆர்வம் காட்டியதையடுத்து நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாத காலத்தில் அவ்வகை திட்டங்களில் ரூ.96,000 கோடியை முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீட்டாளர்கள் ரூ.17,000 கோடியை முதலீடு செய்துள்ளனர்.
தங்கம் இ.டி.எஃப். திட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முதலீடு திரும்பப் பெறப்பட்டதையடுது மார்ச் மாத இறுதியில் ரூ.5,480 கோடியாக காணப்பட்ட தங்கம் நிதி திட்டங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அக்டோபரில் ரூ.5,017 கோடியானது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com