வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம்: உள்நாட்டில் சப்ளையை ஊக்குவிக்க நடவடிக்கை

மத்திய அரசு, வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலராக (ரூ.55,250) நிர்ணயித்துள்ளது. 
வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம்: உள்நாட்டில் சப்ளையை ஊக்குவிக்க நடவடிக்கை

மத்திய அரசு, வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலராக (ரூ.55,250) நிர்ணயித்துள்ளது. 
இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் முற்றிலுமாக நீக்கப்பட்டது. 
இந்த நிலையில், அதிகரித்து வரும் தேவையை ஈடுசெய்யும் வகையில் உள்நாட்டில் சப்ளையை அதிகரிக்கவும், விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 850 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கும் குறைவாக, வெங்காயத்தை யாரும் ஏற்றுமதி செய்ய இயலாது. இந்த விலை நிர்ணயம் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சப்ளை குறைந்ததையடுத்து, பல நகரங்களில் சில்லறை விற்பனையில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.50-ரூ.65ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, 2,000 டன் வெங்காயத்தை இறக்கமதி செய்யுமாறு பொதுத் துறையைச் சேர்ந்த எம்எம்டிசி நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நாபெட், எஸ்எஃப்ஏசி முகமை அமைப்புகளும் உள்ளூர் அளவில் வெங்காயத்தினை கொள்முதல் செய்து சந்தைகளுக்கு அனுப்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் 12 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 56 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com