அசோக் லேலண்ட் விற்பனை 27.5% உயர்வு

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செப்டம்பர் மாத வாகன விற்பனை 27.5 சதவீதம் அதிகரித்தது.

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செப்டம்பர் மாத வாகன விற்பனை 27.5 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அசோக் லேலண்ட் கடந்த செப்டம்பர் மாதத்தில் 15,370 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனை செய்த 12,052 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 27.5 சதவீதம் அதிகமாகும்.
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 8,958 என்ற எண்ணிக்கையிலிருந்து 31.77 சதவீதம் அதிகரித்து 11,804-ஆக இருந்தது. இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 15.26 சதவீதம் வளர்ச்சி கண்டு 3,566-ஆக இருந்தது என்று அசோக் லேலண்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com