நகைகளுக்கு பான் எண், ஆதார் அவசியமில்லை: ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு

22-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் வரி தொடர்பான சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
நகைகளுக்கு பான் எண், ஆதார் அவசியமில்லை: ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு

கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி முறை அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில நிதியமைச்சர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சரக்கு சேவை வரிவிதிப்பை நிர்ணயிக்கும் ஜிஎஸ்டி கௌன்சிலின் 22-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் செயல்பாடு குறித்து மத்திய வர்த்தகத்துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.

மேலும், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மத்திய வருவாய்ச் செயலர் ஹஸ்முக் அதியா தலைமையிலான குழு, தனது முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. 

அதன்படி ஜிஎஸ்டி முறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.


அவற்றில் தற்போது வரை வெளியான சில தகவல்கள்,

ரூ. 50,000-க்கும் மேலாக ஆபரணங்கள் வாங்குவதற்கு இனி ஆதார் மற்றும் பான் எண் சமர்பிக்கத் தேவையில்லை.

சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து குறைப்பு.

ஆயுர்வேத மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு.

கைத்தறி நெசவுத்தொழில் மீதான பொருட்களுக்கு 18 சதவீத வரி மதிப்பீட்டில் இருந்து 12 சதவீத வரியாகக் குறைப்பு.

ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு, குறு தொழிலாளர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தால் போதுமானது. 

கைவினைப் பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு.

வரும் ஏப்ரல் மாதம் முதல் மின்னணு முறையில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வது.

தினசரி உபயோகிக்கும் 60-க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு.

மேலும், குளிர்சாதன வசித படைத்த உணவகங்களில் 12 சதவீதமாக ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com