லாப நோக்கால் பங்குச் சந்தையில் சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்கு நாள்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில் முதலீட்டாளர்களின் லாப நோக்கால் வியாழக்கிழமை வர்த்தகத்தில் திடீர் சரிவைக் கண்டது.

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்கு நாள்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில் முதலீட்டாளர்களின் லாப நோக்கால் வியாழக்கிழமை வர்த்தகத்தில் திடீர் சரிவைக் கண்டது.
பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இருக்காது என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இதனால், ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தைகள் திடீரென வீழ்ச்சிப் பாதையை நோக்கித் திரும்பியது.
முக்கிய எட்டு துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, பண்டிகை காலத்தை முன்னிட்டு மோட்டார் வாகன விற்பனையில் காணப்பட்ட விறுவிறுப்பு உள்ளிட்ட சில சாதகமான நிகழ்வுகள் பங்குச் சந்தையில் வீழ்ச்சியை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் காரணிகளாக அமைந்தன.
பவர்கிரிட் பங்கின் விலை 1.99 சதவீதம் சரிந்து ரூ.204.85-ஆனது. ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் பங்குகளின் விலையும் சரிந்தது. அதேசமயம், என்டிபிசி, கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 79 புள்ளிகள் சரிந்து 31,592 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 26 புள்ளிகள் குறைந்து 9,888 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com