10,000 மின்சார கார்களை தயாரிப்பதில் டாடா மோட்டார்ஸ் தீவிரம்!

10,000 மின்சார கார்களை தயாரிக்க ஒப்பந்தம் கிடைத்துள்ளதையடுத்து, அதற்கான தயாரிப்பு பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
10,000 மின்சார கார்களை தயாரிப்பதில் டாடா மோட்டார்ஸ் தீவிரம்!

10,000 மின்சார கார்களை தயாரிக்க ஒப்பந்தம் கிடைத்துள்ளதையடுத்து, அதற்கான தயாரிப்பு பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான குன்ட்டர் புட்செக் புது தில்லியில் தெரிவித்தது:
கடந்த மாதம் பொதுத் துறையைச் சேர்ந்த எனர்ஜி எஃபீஷியன்ஸி சர்வீசஸ் நிறுவனத்துக்கு (இஇஎஸ்எல்) 10,000 மின்சாரகளை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் பெறப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டமாக 500 மின்சார கார்களையும், அதன் பிறகு 9,500 கார்களையும் தயாரித்து வழங்க முடிவெடுக்கப்பட்டது. மின்சார கார் உற்பத்தி திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறுவனம் தொடங்கி விட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி திட்டங்கள் மேலும் வேகமெடுக்கும். 
மின்சார கார் சந்தையில் டாடா நிறுவனம் வலுவாக கால் ஊன்ற இந்த ஒப்பந்தம் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. 
ஜெஸ்ட், போல்ட், டியாகோ உள்ளிட்ட மாடல்களில் மின்சாரத்தில் இயங்கும் என்ஜின்களைப் பொருத்தி ஏற்கெனவே சோதனை நடத்தியுள்ளோம். 
இஇஎஸ்எல் நிறுவனத்துக்கான டியாகோ மின்சார கார்கள் அனைத்தும் குஜராத்தில் உள்ள சனந்த் ஆலையில் தயாரிக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com