புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி

சாதகமான நிலவரங்களால் பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தன.
புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி

சாதகமான நிலவரங்களால் பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தன.
பங்குச் சந்தைகளில் வர்த்தகம் காலையில் தொடக்கம் முதலே விறுவிறுப்புடன் காணப்பட்டன. 
சென்ற செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைந்தது என்ற மத்திய அரசின் அறிவிப்பு, சர்வதேச நிதியம் இந்திய பொருளாதாரம் வலுவான பாதையில் பீடு நடை போடுவதாக தெரிவித்தது உள்ளிட்ட நிகழ்வுகள் முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. இதனால், அவர்கள் நம்பிக்கையுடன் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தனர். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிப்பும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது.
தொலைத்தொடர்புத் துறை பங்குகளின் விலை 4.23 சதவீதமும், உலோகம் 2.02 சதவீதமும், மருந்து 1.24 சதவீதமும், தொழில்நுட்பத்துறை பங்குகளின் விலை 1.23 சதவீதமும் அதிகரித்தது. இவை தவிர, மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய்-எரிவாயு, பொறியியல் பொருள்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் முதலீட்டாளர்களிடையே தேவை அதிகரித்து காணப்பட்டது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், பார்தி ஏர்டெல் பங்கின் விலை அதிகபட்சமாக 4.96 சதவீதம் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து மஹிந்திரா & மஹிந்திரா பங்கின் விலை 3.08 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.85 சதவீதமும், ஹிந்துஸ்தான் யுனிலீவர் 2.63 சதவீதமும், ஸன் பார்மா 2.52 சதவீதமும், சிப்லா 2.42 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 1.93 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 1.80 சதவீதமும் அதிகரித்தன. இருப்பினும், ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 1.65 சதவீதம் வீழ்ச்சி கண்டது. விப்ரோ, மாருதி சுஸுகி, என்டிபிசி, அதானி பங்குகளுக்கு வரவேற்பின்றி போனதால் அவையும் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் ஏற்றம் கண்டு முன்னெப்போதும் கண்டிராத வகையில் 32,633 புள்ளிகளைத் தொட்டது.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 63 புள்ளிகள் உயர்ந்து புதிய வரலாற்று உச்சமாக 10,230 புள்ளிகளை எட்டியது. அக்டோபர் 13-ஆம் தேதி நிஃப்டி 10,167 புள்ளிகளை எட்டிய சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com