குஜராத்தில் பேட்டரி ஆலை அமைக்கிறது சுஸுகி

ஜப்பானைச் சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், குஜராத்தில் பேட்டரி ஆலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
குஜராத்தில் பேட்டரி ஆலை அமைக்கிறது சுஸுகி

ஜப்பானைச் சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், குஜராத்தில் பேட்டரி ஆலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தோஷிபா கார்ப்பரேஷன் மற்றும் டென்ஸோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரி ஆலையை அமைக்கவுள்ளதாக சுஸுகி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. 
அதற்காக, ரூ.1,200 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அது தெரிவித்தது.
ஆனால், அப்போது இந்த ஆலை இந்தியாவில் எங்கு அமைக்கப்படும் என்பது குறித்து சுஸுகி தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து வருவதால் அந்த வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மூன்று ஜப்பானிய நிறுவனங்களும் கூட்டுத் திட்டத்தின் மூலம் பேட்டரி ஆலையை அமைக்க உடன்பாடு செய்து கொண்டன. 
இந்த நிலையில், லித்தியம் அயன் பேட்டரி ஆலையை குஜராத்தில் அமைக்கவுள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 
அவர் மேலும் கூறியதாவது: குஜராத்தில் சுஸுகி அமைத்துள்ள கார் ஆலையின் முதல் உற்பத்தி தளத்தின் மூலம் ஏற்கெனவே ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த 2-3 ஆண்டுகளில் வாகன உற்பத்தி திறனை 7.5 லட்சமாக அதிகரிக்க இரண்டு மற்றும் மூன்றாம் தளங்களை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஆண்டுக்கு கூடுதலாக 2.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் நான்காவது தளத்தை அமைக்கும் திட்டம் நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது.
வரும் 2020-ஆம் ஆண்டில் கார்கள் விற்பனையை 20 லட்சமாகவும், அதற்கு அடுத்த 2-3 ஆண்டுகளில் 25 லட்சமாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதனை கருத்தில் கொண்டே தற்போது முதலீடுகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.
மாருதி சுஸுகி இந்தியா, ஜப்பானைச் சேர்ந்த சுஸுகி மோட்டோ கார்ப்பின் துணை நிறுவனமாகும். ஹரியாணாவில் உள்ள இரண்டு ஆலைகள் மூலம் மாருதி சுஸுகி ஆண்டுக்கு 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com