ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை (செப்.14) பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.22,824-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.16 குறைந்து, ரூ.2,853-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து 43 ரூபாய் 80 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.43,800-ஆகவும் இருந்தது.