நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி

மத்திய அரசுக்குச் சொந்தமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் அனுமதி கிடைத்துள்ளது. 
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி

மத்திய அரசுக்குச் சொந்தமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் அனுமதி கிடைத்துள்ளது. 
பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபியிடம் அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இந்த பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் கொண்டுள்ள 9.6 கோடி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதேபோன்று, நிறுவனம் கொண்டுள்ள 2.4 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதையடுத்து, மொத்தம் 12 கோடி பங்குகளை இந்த பொதுப் பங்கு வெளியீட்டின் வாயிலாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.6,500 கோடியை திரட்டும் என்று வணிக வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டை, ஆக்ஸிஸ் கேபிடல், யெஸ் வங்கி, நோமுரா, ஐடிஎஃப்சி மற்றும் கோட்டக் வங்கிகள் நிர்வகிக்க உள்ளன. இந்த பங்கு வெளியீடு நடப்பு நிதி ஆண்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பங்கு விற்பனையின் மூலம் ரூ.72,500 கோடி திரட்டும் திட்டத்துக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் நிறுவனங்களும் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள செபியின் அனுமதிக்காக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ லொம்பார்டு நிறுவனத்தின் பங்கு வெளியீடு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரும் புதன்கிழமை எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு தொடங்கவுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ரூ.6,000 கோடிக்கு பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இதன் மூலம் பங்குச் சந்தையில் களமிறங்கிய முதல் காப்பீட்டு நிறுவனம் என்ற பெருமையை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com