ஓட்டுநர் தேவையில்லாத டிராக்டர்: மஹிந்திரா அறிமுகம்

ஓட்டுநரின் அவசியம் இல்லாத டிராக்டரை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
ஓட்டுநர் தேவையில்லாத நவீன மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டரை சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா.
ஓட்டுநர் தேவையில்லாத நவீன மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டரை சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா.

ஓட்டுநரின் அவசியம் இல்லாத டிராக்டரை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
ஓட்டுநரில்லா டிராக்டரை செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்தது:
ஓட்டுநரின் அவசியம் இல்லாத டிராக்டரை இந்தியாவிலேயே முதல் முதலாக உருவாக்கியிருக்கிறோம். சென்னையில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் இந்த அதிநவீன உருவாக்கப்பட்டது. தொலைவிலிருந்தே இதனை ஸ்டார்ட் செய்யவும், தொலைவிலிருந்து இதனை இயங்கச் செய்யவும் முடியும். தொலைவிலிருந்தே டிராக்டரை நிறுத்தவும் முடியும்.இந்த டிராக்டர் இயங்கும்போது முன்னால் தடைகள் இருந்தால் அதனை உணர்ந்து கொள்ளும் திறன் கொண்டது. நிலத்தின் வரம்புகளை டிராக்டரின் நினைவுத் திறனுக்கு அளித்துவிட்டால் அந்த டிராக்டர் ஈடுபடுத்தப்பட்ட நிலப்பகுதியைவிட்டு வெளியேறாது. நிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் இடைவெளி விடாமல், அடுத்தடுத்த வரிசையில் முழுமையாக உழுதுவிடும் திறன் இதற்கு உண்டு. உழுவது, மருந்து தெளிப்பது போன்ற அனைத்து வேளாண் பணிகளுக்கும் இதனைப் பயன்படுத்த இயலும்.
இந்த டிராக்டர் வேளாண் துறையில் பெரும் புரட்சியை உருவாக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விவசாயியின் வேலைத்திறனை அதிகரிக்கச் செய்வதுடன் வேளாண் உற்பத்தியையும் இது அதிகரிக்கச் செய்கிறது. கடந்த ஆண்டு டிஜிசென்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தோம். அத்துடன் டிரைவரின் அவசியம் இல்லாத புதிய தொழில்நுட்பத்தையும் இணைத்து இதனை உருவாக்கியுள்ளோம். அடுத்த ஆண்டு முதல் இந்த டிராக்டர் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும். மஹிந்திராவின் 20 எச்.பி. திறன் கொண்ட மாடல் முதல் 100 எச்.பி. திறன் கொண்ட டிராக்டர்கள் வரை அனைத்து மாடல்களிலும் இந்தத் தொழில்நுட்பத்தை இணைத்து உருவாக்க முடியும். படிப்படியாக அனைத்து மாடல்களிலும் இந்தத் தொழில்நுட்பத்தை இணைத்து விற்பனைக்குக் கொண்டு வருவோம். 
இந்திய சந்தையில் விற்பனை தொடங்கிய பிறகு விரைவிலேயே அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளிலும் மஹிந்திராவின் இந்த அதிநவீன டிராக்டர் அறிமுகம் செய்யப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com